சுமுது ருக்ஷானை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் குவாரியில் விழுந்து உயிரிழந்த முல்லேரியா இளைஞர் கொலையாளி இல்லை.
முல்லேரியா உள்ளுராட்சி சபையின் பொஹொட்டு உறுப்பினர் சுமுது ருக்ஷானை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட நபர், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் காட்டச் சென்ற நிலையில் கல்குவாரி ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலைக்கு ஆதரவான பலரை அடையாளம் கண்டு , மாவட்ட குற்றப்பிரிவு நடத்திய விரிவான விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் காவலில் இருந்த போது பாறைகளில் விழுந்து உயிரிழந்தவர் இச்சம்பவத்தின் உண்மையான கொலையாளி இல்லை என விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடவத்தை, பியன்வில பகுதியைச் சேர்ந்த துவான் ஷிராத் என்பவர் விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் இதற்கு முன்னர் பல குற்றச் சாட்டுகளை உடையவராவும் இருந்துள்ளார். ஆனால் கடந்த மூன்று வருடங்களில் இவர் மேல் எந்தவொரு குற்றச் செயல்ளிலும் ஈடுபட்டதாக புகார் எதுவும் பதிவாகவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்திருந்தனர்.
ஆனால் மாவட்ட குற்றப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கொலையாளிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டியவருக்கும் அடைக்கலம் கொடுத்த 23 வயதுடைய ஒரு இளைஞனை ஹிம்புட்டானை மஹவத்தை வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து போலீசார் கைது செய்யதுள்ளனர்.
கொலை ஒப்பந்தத்தை ஒப்படைத்ததாகக் கூறப்படும் ஜிலே என்ற குற்றவாளியின் போதைப்பொருள் பணத்தை இந்த இளைஞன் நிர்வகித்து வருவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையில், ஜிலேயின் அறிவுறுத்தலின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும், சவாரி செய்தவரையும் தனி இடத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து, ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வழங்கியதுடன், கொலை ஒப்பந்தம் தொடர்பான பணத்தையும் இந்த இளைஞன் எவ்வாறு கொடுத்தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு கடந்த 2ம் தேதி மாலை 4.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இந்த தகவல்கள் அனைத்தும் வேறு ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த இளைஞனையும் கொலையாளிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
உண்மையான கொலையாளி தெரியவந்துள்ளதாகவும், அவரைக் கைது செய்யும் படலம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.