ஐரோப்பிய ஆணைக்குழு ரணிலை சந்தித்து சொன்னது என்ன?
ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
3 விசேட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பின்வருமாறு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது. ஐரோப்பிய ஆணையம் சவாலான காலங்களில் பங்குதாரராக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, சிவில் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக கருத்துச் சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடு உரிமை ஆகியவை மிகவும் முக்கியம்.
இலங்கையை மீண்டும் பாதையில் கொண்டு வருவதற்கு ஒருங்கிணைந்த மற்றும் உள்ளடக்கிய நடவடிக்கை தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
வெளிநாட்டு விவகாரங்களில், ஐரோப்பிய ஒன்றியம் 3 முக்கிய தற்போதைய செயல்முறைகளுக்கு குறிப்பாக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியை ஊக்குவித்தது.
1️⃣GSP+
2️⃣ ஐ.எம்.எஃப்
3️⃣ மனித உரிமைகள் பேரவை
இந்த செயல்முறைகள் வெற்றியடைய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது என அறிவித்துள்ளது.
1/2-Had a constructive meeting w/ Pres.@RW_UNP today.??is a partner in challenging times. For us, protection of civil & #humanrights, above all #freedom of expression & right to #dissent, is of utmost importance. We agree bringing ??back on track requires joint & inclusive action pic.twitter.com/b70Xmh3ofK
— EU in Sri Lanka (@EU_in_Sri_Lanka) August 10, 2022