புதிய அனைத்துக் கட்சி கெபினட் அமைச்சரவை அடுத்த வாரம்…
அடுத்த வாரம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின்படி, அனைத்துக் கட்சி அரசுக்கு பதிலாக அனைத்துக் கட்சி இணைந்த ஆட்சி அமைக்கப்படும்.
தற்போதுள்ள அமைச்சரவையில் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளை இணைத்து சர்வகட்சி அரசாங்க அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.