இலங்கைக்கு நன்கொடை வழங்கிய அவுஸ்ரேலிய வீரர்கள்…!
பல தசாப்தங்களில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள், சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
UNICEF ஆஸ்திரேலிய தூதுவராக இருக்கும் கேப்டன்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோரின் தலைமையில், இந்த குழு, அமைப்பின் இலங்கைக்கு $45,000 அவுஸ்ரேலிய டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் நன்கொடையாக வழங்கும் நிதியானது, தேவையிலுள்ள 1.7 மில்லியன் பாதிக்கப்படக்கூடிய இலங்கைக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் மனநலச் சேவைகளை ஆதரிப்பதற்கான யுனிசெப்பின் திட்டங்களுக்குச் செல்லும் எனவும் அறியவருகின்றது.