ஆப்கானிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலில் தலிபான் மதகுரு பலி.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அவர்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த போதிலும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் அங்கிருந்த தலிபான் மத குருவான ஷேக் ரஹி முல்லா என்பவர் இறந்தார். இதனை துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி உறுதி படுத்தி உள்ளார்.
இந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டவன் ஏற்கனவே தனது காலை இழந்தவன். அவன் செயற்கை காலை பொருத்தி இருந்தான். அவன் எந்த அமைப்பை சேர்ந்தவன் என தெரிய வில்லை.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதலுக்கான முழுமையான காரணம் என்ன வென்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.