முக்கிய புள்ளிகள் இருவருக்கு ஆளுநர் பதவிகள்!

முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.
குறித்த பதவியை ஏற்பதற்குத் தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல் மாகாணசபை ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார். இவர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.