நீதிமன்றில் சரணடைந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் !

“கோட்டா கோ கம” போராட்டத்தில் தீவிர அங்கத்தவராக இருந்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் சில நிமிடங்களுக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
தமக்கு எதிராக கோட்டை பொலிஸாராலும் கொம்பனி வீதி பொலிஸாராலும் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலேயே அவர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.