நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மனு வடக்கு மாகாண ஆளுநருக்கு …
பட்டதாரிகளுக்கு அரச சேவைக்கும் இணைக்கும் திட்டத்தில் நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்தனர்.
அரசினால் 50 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டம் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படுகிறது. அதில் மார்ச் மாதம் வழங்கப்பட்ட நியமனத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடிய தோடு வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது நியமனத்தை உறுதிப்படுத்துமாறு கோரி மனு ஒன்றையும் கையளித்தனர்.
“நியமனம் நிராகரிக்கப்பட்ட காரணங்களாக கு
றிப்பிடப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தில் பங்களிப்பு உள்ளமை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கான பிரச்சினை மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை போன்ற மூன்று விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
குறித்த விடயங்கள் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அதனை தெளிவுபடுத்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க ஆவன செய்யவேண்டும்” என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.