உறவுகளைத் தேடி 121 பேர் உயிரிழப்பு.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டவர்களில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலைந்து பல துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து வயோதிபக் காலங்களில் நோய்வாய்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் பலர் இருந்து வருகின்றனர் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.