காலிமுகத்திடல் Gota Go Gama போராட்ட களம் அகற்றப்பட்டது.(Video)
காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் விடப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களையும், அங்கிருந்த மக்களையும் இன்று (12) பிற்பகல் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அகற்றியுள்ளனர்.
அதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில், நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற காலிமுக கோட்டகோகம போராட்ட மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அநேகர் பெரும்பான்மையான செயற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். சிலர் வெளியேற மறுத்து இருந்த நிலையில் , அவர்கள் இறுதியாக வெளியேற்றப்பட்டனர்.