கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை உயர்வு.

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.60/- என்றும், 1 கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை ரூ.1300/- என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.