ரணிலின் சர்வகட்சி அரசு பேச்சு வார்த்தை முறிவு..

அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
பாராளுமன்றத்தில் உள்ள பல கட்சிகள் கட்சிகளாக அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விரும்பாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கத்துடன் இணைந்தவுடன், அரசியல் கட்சிகளாக இல்லாவிட்டாலும், கட்சிகளிலிருந்து தனித்தனியாக வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளனர்.