ஹராம் என்றால் என்ன?… ஹலால் என்றால் என்ன?…
ஹராம், ஹலால் என்பது ஒவ்வொரு மனிதரும் தெரிந்து வைத்திருந்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இருக்காது.
அதாவது ஒரு டீ வீ,யையோ, ரேடியோவையோ. மற்றும் வேறு பொருட்களையோ செய்த ஒருவர் அத்தோடு ஒரு [கெட்லொக்] கையும் வைத்திருப்பார். இப் பொருளை இதில் கூறியுள்ளபடி பாவித்தால் நீண்ட நாள் பாவிக்கலாம். இதில் கூறியதற்கு மாற்றமாகப் பாவித்தீர்கள் என்றால் சீக்கிரம் இது செயல் இழந்துவிடும். எனவே இதில் கூறியுள்ளபடி எச்சரிக்கையாகப் பாவியுங்கள் என குறிப்பிட்டிருப்பர்.
எல்லாவற்றையும் படைத்துப் பரிபாலிக்கும் அந்த இறைவன் மனிதர்களாகிய எம்மைப் படைத்து எங்களுக்கு எது கூடும் [ஹலால்]. எது கூடாது [ஹராம்] என்பதைத் தெட்டத் தெளிவாக அல் குர்ஆன் மூலம் விளக்கியுள்ளான். அல்லாஹ்வுடைய ஏவலை ஏற்று விலக்களைத் தவிர்ந்து நடந்தோமானால் மனிதர்களாகிய நாம் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ முடியும்.
மாமிச உணவை எங்களுக்கு உண்ண அனுமதித்து அது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப் பட்டதாக இருக்க வேண்டும் எனவும், இஸ்லாமிய முறைப்படி கால் நடைகள் அறுக்கப்படும் பொழுது அவைகள் வலியை உணர்வது குறைவு. அறுத்ததும் அவை துடிப்பது அதன் இரத்தம்யாவும் வெளியாவதற்குத்தான், அதன் கழுத்திலுள்ள அந்தப் பிரதான நரம்பு வெட்டப்பட்டதும் உடம்பிலுள்ள அவ்வளவு இரத்தமும் வெளியாகிவிடும். அதன் உடம்பில் இருந்த நோய்க் கிருமிகள் யாவும் இரத்தத்துடன் வெளியாகி அதன் உடம்பிலுள்ள மாமிசம் தூய்மையாகி விடும். ஆனால் கழுத்து நெரித்தோ, அடித்தோ, வேறு முறையிலோ இறந்திருந்தால் இரத்தம் உறைந்து அந்த இரத்தத்திலுள்ள கிருமிகள் அதன் இறைச்சியில் ஊடுருவிவிடும். அதனை நாம் சாப்பிட்டால் அது எங்களுடைய உடம்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எல்லாம் படைத்துப் பரிபாலிக்கும் அந்த ரஹ்மான் எங்களுக்கு அழகான வாழ்க்கை வழி முறைகளையும் கற்றுத் தந்துள்ளான்.
அவனுடைய ஏவலை எடுதது விலக்களைத் தவிர்ந்து நடந்தோமானால் எங்கும் பிரச்சினை இல்லை. இன்ஷா அல்லாஹ்!