வங்கி ஊழியர்களை கழிவறைக்குள் பூட்டிவிட்டு, கோடிக்கணக்கான தங்கத்தை கொள்ளையடித்த கும்பல்! சென்னையில் துணிகர சம்பவம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பெடரல் வங்கியில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கொள்ளையர்களின் ஒருவர் அதே வங்கியில் வெளி செய்பவர் என சந்தேகிக்கப்படுகிறது.
வங்கி ஊழியர்களை கழிவறைக்குள் வைத்து பூட்டிவிட்டு கோடிக்கணக்கான தங்கத்துடன் கொள்ளையர்கள் தப்பியோடிய சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள பெடரல் வங்கியில் சனிக்கிழமை மாலை பல கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் வாங்கி ஊழியர்களை கழிப்பறையில் பூட்டி, தங்கநகை கடன் அறைக்குள் புகுந்து நகைகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து வங்கி தரப்பில் “ஸ்ட்ராங் ரூமின் சாவியை எடுத்து, ஊழியர்களை கழிப்பறையில் அடைத்துவிட்டு, கேரி பேக்கில் தங்கத்துடன் தப்பினர். 32 கிலோ தங்கம் திருடப்பட்டது” என்னு கூறியதாக பொலிஸ் கமிஷனர் சங்கர் ஜீவல், கொள்ளையர்களின் செயல் முறை குறித்து விளக்கினார்.
இந்த கொள்ளை அதே வங்கி கிளையில் பணிபுரியும் ஊழியரின் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், தங்கக் கடன் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டதாகக் கூறும் ஒரு காவலாளி, “அவர்கள் எனக்கு வழங்கிய குளிர்பானத்தை உட்கொண்ட பிறகு நான் மயக்கமடைந்தேன்” என்று கூறியுள்ளார்.
வாங்கிக்கிளை நேற்று மூடப்பட்டிருந்ததால் சில கணக்கு பணிகளுக்காக சிலர் மட்டுமே வந்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளை பிடிக்க பொலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.