மவ்பிமவுக்கு எதிராக நாமல் முறைப்பாடு : நெத்மியை வைத்து அரசியல் விளம்பரம் : எது உண்மை?
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி அஹின்சாவின் வெற்றியை அரசியல் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் நேற்று (13) மௌபிம பத்திரிகையில் வெளியான செய்திக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொதுநலவாய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கிரியுல்ல பகுதியை சேர்ந்த நெத்மி அஹின்சாவை கௌரவிக்கும் விதமாக கொழும்பு அறக்கட்டளை நிறுவனம் நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.நெத்மிக்கு கொழும்பு வர வாகனம் ஒன்று இல்லாமையால் மொட்டு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வாகனம் ஒன்றை கொடுத்து உதவுதற்கு சம்மதித்துள்ளார்.
அதற்கமைய நெத்மி , அவரது பயிற்சியாளரோடு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது விளையாட்டு துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க , அவர்களது பயணத்தை திசை திருப்பி, நாமல் ராஜபக்சவிடம் அழைத்து செல்ல சாரதியிடம் கூறியிருந்த சதியை அறியாதிருந்துள்ளனர்.
பிரதேச சபை உறுப்பினரால் சாரதிக்கு கொடுக்கப்பட்டிருந்த இரகசிய அறிவுறுத்தலின்படி , விளையாட்டு துறை அமைச்சரின் வீட்டுக்கு முதலில் செல்வதாக தெரிவித்து அவர்களை நாமல் ராஜபக்சவின் வீட்டுக்கு அழைத்து சென்ற போது அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பாதுகாவலுக்கு இருந்தோர் , அவர்களது தொலைபேசிகளை அணைக்குமாறு பணித்துள்ளனர்.
தொலைபேசி செயல்படாதிருக்க நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோரும் , செய்வதறியாது திக்குமுக்காடி போயுள்ளனர். அச்சமயத்தில் நாமலின் நண்பர்கள் , நாமலை நெத்மி சந்தித்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இலங்கை அறக்கட்டளை நிறுவனத்துக்கு வந்த நெத்மி நடந்த அசம்பாவிதத்தை தெரிவித்த போது , அனைவரும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
– மவ்பிம
இந்தச் செய்தியை நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையில் நிராகரித்துள்ளதுடன், தனக்கும் நெத்மி அஹின்சாவுக்கும் எதிராக சேறு பிரசாரம் செய்யும் சமூக ஊடகங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறும் கோரியுள்ளார்.
நெத்மி அஹின்சாவும் அவரது பயிற்சியாளரும் கட்டாயப்படுத்தி தன்னை சந்திக்க வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு அரசியல்வாதியாக இதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியும், ஆனால் நேத்மி அஹிம்சா இப்படி சேறு பூசுவதை தாங்க முடியாது என்கிறார்.
இந்தச் செய்தி தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மௌபிம பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.