தேர்தல் நடந்தால் ‘மொட்டு’வுக்குப் படுதோல்வி உறுதி! – ஜே.வி.பி. தெரிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் அடுத்த தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றிகொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.
இதன் காரணமாகவே அரசு தேர்தலுக்குச் செல்ல அஞ்சுகின்றது எனவும், அதிகாரத்தைத் தக்கவைக்க வேறு வழிகளை அரசு தேடுகின்றது எனவும் அவர் கூறினார்.
ஆனால், தற்போது தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது எனவும், குறுகிய காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் குறிப்பிட்டார்.