விமானத்துக்குள் வைத்து கைதான தனீஷ் அலிக்கு பிணை

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்க போதிய சட்சிகள் இல்லை என்பதால் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபரை கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Late News
தனிஸ் அலி பிணையில் விடுவிப்பு
காலிமுகத்திடல் போராட்டச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான தனிஸ் அலி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், டுபாய் செல்லப் புறப்படவிருந்த விமானத்துக்குள் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த தனிஸ் அலி, விசாரணைகளின் பின்னர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவருக்குக் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவரை 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.