யாழ் மாவட்ட இராணுவ தளபதி அரசாங்க அதிபர் சந்திப்பு.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொண்டார்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு நன்றியினை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக இராணுவத்தினர் இந்த மனிதாபிமான செயற்பாடுகளை வடபகுதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தோடு யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினரால் வீடற்றவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறான உதவிகளை தொடர்ந்து மக்களுக்கு இராணுவத்தினரால் செயற்படுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் மக்கள், ,அண்மையில் மீள்குடியேறிய மக்கள் தொடர்பிலும் கலந்துரையாடியதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துயார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி யாழ்ப்பாணத்தில் சந்திப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தற்போது நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார் குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) s.முரளிதரன் ,உதவி மாவட்ட செயலர் மற்றும் இராணுவத்தின் 512 பிரிகேட் கட்டளைத்தளபதி ரத்நாயக்க மற்றும் பலாலி இராணுவ கட்டளை தலைமையக உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்
குறித்த சந்திப்பின் பின் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு இராணுவ தளபதியினால் நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.