தடை நீக்கம் ஏன்? – பந்துல விளக்கம்.
வெளிநாட்டு முதலீடுகளை எதிர்பார்த்து, இலங்கை அரசு சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முதலீடுகளைப் பெறவே சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது எனக் கூறுவது சிலரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
1968 ஆம் ஆண்டின் 45ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டவிதிகளுக்கமைய, பாதுகாப்பு அமைச்சால் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் அல்லாத அமைப்புக்கள் மீதான தடை அல்லது தடைநீக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கைமய, 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டது.
அண்மைய காலங்களில் குறித்த அமைப்புக்களின் நடவடிக்கை தொடர்பாகத் தொடர்ச்சியான தீவிர கண்காணிப்பின் பின்னரே இந்தத் தடை நீக்கப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள கொள்கைகளுக்கு அமையவே இந்தத் தடை நீக்கப்பட்டது” – என்றார்.