அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

இரத்மலானை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்மலானைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.