ஜனாதிபதி தேர்வன்று பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச.

ஜனாதிபதி நியமன வாக்களிப்புக்காக , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு அனுகூலங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டதாகவும், இவைகளை ஊழல், முறைகேடுகள் என குறிப்பிடலாம் எனவும், முறைகேடுகளை தொடர்வதற்கு சலுகைகளாக அமைச்சரவை பத்திரம் கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எமது நாடு பொருளாதார, சமூக, அரசியல் பேரழிவை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் தற்போதைய பிரதமர் விசித்திரமான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து அதன் ஊடாக எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் வசதிகளை அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நியமன சமயத்தில் எம்.பி.க்களை தம் வசம் ஈர்த்து தடையின்றி பங்கேற்க வசதிகள் வழங்கப்பட்டதாகவும், இந்த வசதிகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 எம்.பி.க்களுக்கு எரிபொருள் வசதி, ஓட்டுனர் வசதி, போக்குவரத்து வசதிகள் கூட செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்கு பதிலாக, ஊட்டச்சத்து குறைபாடு நிலைமை வேகமாக அதிகரித்துள்ள நிலையில் என்றும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் பேரவை-பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கூட்டம் இன்று (16) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களை ஏலத்தில் எடுக்கும் , இந்த அரசியல் விளையாட்டிற்கு தான் தயாராக இல்லை எனவும், நாட்டை கட்டியெழுப்புவதாக சொல்லிக் கொண்டு மேற்கொள்ளப்படும் போலியான வேலைகளை தான் ஆதரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.