பாகிஸ்தானில் பஸ், பவுசர் மோதிக்கொண்டதால் 29 பேர் பலி.

பாகிஸ்தானில் பயணிகள் பஸ் ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் மோதிக்கொண்டதால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
முல்தான்- சுக்குர் நெடுஞ்சாலையில் (16) அதிகாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக முல்தான் ஆணையாளர் அமீர் கத்தாக் தெரிவித்துள்ளார்.
லூகூரிலிருந்து கராச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ், எரிபொருள் பவுசரின் பின்புறத்தில் மோதி தீப்பற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் 29 பேர் ஸ்தலத்தில் உயிரிழந்தனர் எனவும் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.