வேலணையில் காப்பெற் வீதிகளாக்க புனரமைக்கப்படும் வீதிகள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் வேலணையில் காப்பெற் வீதிகளாக்க புனரமைக்கப்படும் வீதிகள்!
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை பிரதேசத்தில் முதற் கட்டமாக மூன்று வீதிகள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் அவற்றின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுமூர்த்தி அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்மொழிவில் ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த புனரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவள்ளது.
குறித்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சித்திவிநாயகர் வீதி (0.7Km) சிற்பனை வீதி (2.700 Km) திருவள்ளுவர் வீதி (1.08Km) ஆகியன காப்பெற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது