ஐக்கிய அரபு இராச்சியத்தில்நடைபெறவுள்ள இண்டெர்நெசனல் லீக் T20.
(ILT20) தொடருக்கான அபுதாபி நைட் ரைடர்ஸ் குழாத்தில் இலங்கை வீரர்கள் மூவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்க மற்றும் அனுபவ சகலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன ஆகியோரே இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ILT20 தொடருக்கான குழாம்களை பொருத்தவரை ஒரு அணியில் 14 வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்துக்கொள்ள முடியும். இதில் ஐசிசியின் முழு அங்கத்துவம் பெற்ற நாடுகளிலிருந்து 12 வீரர்களையும், அங்கத்துவம் பெறாத நாடுகளிலிருந்து 2 வீரர்களையும் ஒப்பந்தம் செய்துக்கொள்ள முடியும்.
அதன்படி குழாத்தில் மொத்தமாக 18 வீரர்களை இணைத்துக்கொள்வதற்கான அனுமதியை ILT20 நிர்வாகம் வழங்கியுள்ளது.
அதன்படி அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை பொருத்தவரை மேற்குறித்த மூன்று இலங்கை வீரர்களுடன், சர்வதேசத்தின் பல முன்னணி வீரர்களையும் தங்களுடைய குழாத்தில் இணைத்துள்ளது.
அதன்படி மேற்கிந்திய தீவுகளின் அன்ரே ரசல், சுனில் நரைன், ரவி ராம்போல், இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோவ், அயர்லாந்தின் போல் ஸ்ரேலிங் மற்றும் தென்னாபிரிக்காவின் கொலின் இங்ரம் ஆகிய முன்னணி வீரர்கள் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ILT20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதுடன், 34 போட்டிகள் கொண்ட தொடராக இந்த தொடர் அமையவுள்ளது. போட்டிகள் அனைத்தும் டுபாய், ஷார்ஜா மற்றும் அபு தாபியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள்
சரித் அசலங்க, லஹிரு குமார, சீகுகே பிரசன்ன, சுனில் நரைன், அன்ரே ரசல், ஜொனி பெயார்ஸ்டோவ், போல் ஸ்ரேலிங், கொலின் இங்ரம், அகீல் ஹொசைன், ரவி ராம்போல், ரெய்மன் ரீபர், கெனார் லிவிஸ், அலி கான், பிரெண்டன் கிலோவர்