இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு கிழக்கு நிலங்களை வழங்க தீர்மானம்.

பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தனியார் காணிகளை உடனடியாக உரிமையாளர்களுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காணி விநியோகம் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த மாகாணங்களில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை புலம்பெயர் மக்களிடமிருந்து பெறுவதே இந்த தீர்மானத்தின் நோக்கமாகும்.