பிரித்தானிய யுவதியான கெல்லி பிரேசரை காணவில்லை.
இந்நாட்டுப் போராட்டம் குறித்து தனது சமூக வலைத்தளக் கணக்கில் பதிவு செய்ததன் காரணமாக விசா ரத்து செய்யப்பட்ட பிரித்தானிய யுவதியான கெல்லி பிரேசரை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி அவரது விசா காலம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று (18) அவர் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர் குறித்த எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் கெல்லியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு பிரஜை ஒருவர் விசா இன்றி இலங்கையில் தங்கியிருப்பது தவறு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கெல்லி பிரேசர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குடிவரவுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்படுவார்.