கோட்டாபய ராஜபக்ச “கிரீன் கார்டு”க்கு விண்ணப்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்காவிற்கு செல்வதற்காக ‘கிரீன் கார்டு’ கோரி விண்ணப்பித்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் கடந்த மாதம் முதல் கிரீன் கார்ட் வசதி மூலம் அமெரிக்க குடியுரிமை பெறும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அமெரிக்க குடியுரிமை கொண்டவராக இருப்பதால் , முன்னாள் ஜனாதிபதியால் அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடிவதாகவும் கூறப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் இருப்பதாகவும், நவம்பர் மாதம் வரை அங்கு தங்கியிருக்க அவர் தீர்மானித்தாலும், அந்த முடிவை ரத்து செய்துவிட்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி இலங்கை திரும்பத் தயாராக இருப்பதாகவும் அதே செய்தித்தாள் தெரிவித்துள்ளது.