தனுஷின் திருச்சிற்றம்பலம் முழு விமர்சனம்
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ், பிரகாஷ்ராஜ்,பாரதிராஜா, நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராசி கண்ணா என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஜவகர் இயக்க அனிருத் இசையில் உருவாக்கியுள்ளது.
படத்தின் கதைக்களம் : திருச்சிற்றம்பலம் தனுஷ் மற்றும் அவருடைய அப்பா பிரகாஷ் ராஜ் என இருவரும் பேசாமல் இருக்கின்றனர். இருவரும் பேசாமல் இருப்பதற்கான காரணம் அம்மாவின் இழப்புதான். தனுஷின் தாத்தாவாக பாரதிராஜா நடித்திருக்கிறார். தன்னுடைய பெயரான திருச்சிற்றம்பலம் என்பதை தனுஷுக்கும் பெயராக வைக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது swiggy, zomato போன்ற ஒரு உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
ராசி கண்ணாவை கரெக்ட் செய்ய கவிதை எழுதி அதை நித்யா மேனனிடம் படித்துக் காட்டி உதவி கேட்கிறார். இப்படியெல்லாம் கதை ஒரு பக்கம் நகர இன்னொரு பக்கம் பிரகாஷ்ராஜுக்கு ஸ்ட்ரோக் வந்து விடுகிறது. அடுத்து என்ன நடந்தது? தனுஷ் உடன் ஜோடி சேர்ந்தது ராசி கண்ணா வா? அல்லது நித்யா மேனனா? அப்பா மகனுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்ததா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
படத்தைப் பற்றிய அலசல் : தனுஷ் வழக்கம் போல எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். நித்யா மேனன் இந்த படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் சில சமயங்களில் தனுஷின் நடிப்பையும் தூக்கி சாப்பிட்டு உள்ளார்.
கவிதையில் காமெடி சொல்லி அனைவரையும் சிரிக்க வைக்கிறார் பாரதிராஜா. எமோஷன் காட்சிகள் நம்மை உருக வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் அதிர வைக்கிறது.
கேமியோ ரோலில் வரும் பிரியா பவானி சங்கரின் நடிப்பு சூப்பர். படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. அனிருத் இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் அனைத்தும் சூப்பர்.
மித்ரன் ஜவகர் இயக்கத்தில் இதற்கு முன்னதாக வெளியான படங்களைப் போலவே இந்த படத்திலும் காமெடி பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. ஏற்கனவே சில படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும் அதனை வித்தியாசமாக சலிப்பு இல்லாமல் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ளனர்.