மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் மாட்டினர்!

மஸ்கெலியா, சாமிமலை – ஸ்டொக்ஹோம் தோட்டப் பகுதியில் உள்ள சாமிமலை ஓயாவில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்கள், ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.