சர்வகட்சி அரசாங்கப் பேச்சு வார்த்தை முடிவடைந்தது : தேசிய அரசொன்று உருவாகலாம்?
மொட்டு கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் அமைச்சரவையில்…
சஜித் தரப்பிலிருந்து எரான், ஹர்ஷ, சம்பிக்க, ராஜித, கபீர் ஆகியோர் அமைச்சுகளுடன் புதிய அரசாங்கத்தில் இணைவதற்கு தயார்…
பழைய அமைச்சரவையில் முக்கியப் பங்காற்றிய அமைச்சர்கள் புதிய அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க முடியாவிட்டால், கூடிய விரைவில் தேசிய அரசாங்கத்தை அமைக்குமாறு பல அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்துக் கட்சி ஆட்சிக்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிட்டால், அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்களை ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோரியுள்ளனர்.
அனேகமாக உருவாக்கப்படும் அரசாங்கம் , தேசிய அரசாங்கமாக அமையும் எனவும், அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையை பெயரிட்டு அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் மிகவும் நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ராதேவி வன்னியாராச்சி மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் அடங்குவார்கள் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோரும் அமைச்சுப் பதவிகளுடன் இந்தக் குழுவில் இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன, தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லாவுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
அமைச்சர் பதவிகளுக்கு தேவையான எண்ணிக்கையை விட அதிகமாக விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் அதிகபட்சமாக 35 பேரை புதிய அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருடர்கள் எல்லாரும் முக்கிய அமைச்சர்களை ஏற்கனவே திருடியது கொள்ளை அடித்தது போதாது இன்னும் கொள்ளை அடிக்க ஆசை நாய்கள்