இலங்கைக்கு உதவுவதற்கு முன் அதிகார பகிர்வை வழங்குங்கள் – கூட்டமைப்பு.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு புலம்பெயர் மக்கள் தயாராக இருப்பதாகவும், அதற்காக இலங்கையில் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்தால், அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.