தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றம் வரும் கோட்டா?

தாய்லாந்தில் இருந்து இம்மாத இறுதியில் இலங்கைக்குத் திரும்பவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்புக்காகவும், வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தேவையான இராஜதந்திர அந்தஸ்தைப் பெறுவதற்காகவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக வியத்மக அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி சீதா அரம்பேபொல தேசியப் பட்டியலில் இருந்து விலகவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவும் நாடாளுமன்றம் வந்தால், சபையில் உள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயரும்.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    திருடனுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு என்றால் அது ஸ்ரீலங்காதான் அரசியல்வாதிகள் யாருக்கும் படிப்பறிவில்லாத முட்டாள்களாக இருக்கின்றனர் என்ன செய்வது? இராவணன் ஆட்சி செய்த நாட்டின் நிலை இப்படியாகிவிட்டதே

Leave A Reply

Your email address will not be published.