யாழில் புதிய கட்டடத் தொகுதியைத் திறந்துவைத்த கல்வி அமைச்சர்!

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய கற்கை நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இக்கட்டடத் தொகுதியை இன்று காலை 10மணியளவில் திறந்து வைத்ததுடன் நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன், கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பீ.எம்.சீ. திலகரத்ன, திறந்த பல்கலைக்கழக யாழ். பிராந்திய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், விரிவுரையாளர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.