நாடு திரும்பும் கோட்டாபய பிரதமராகிறார்?
இலங்கைக்கு திரும்பி வரவிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை , மீண்டும் அரசியலுக்குக் கொண்டு வர மொட்டு கட்சியின் சிலர் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக கொண்டு வரப்பட்ட சீதா அரம்பேபொலவை நீக்கி , முன்னாள் ஜனாதிபதிக்கு அவரது இடத்தை வழங்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்னும் சில வாரங்களுக்குள் உருவாக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமராக , கோட்டாபய ராஜபக்சவின் பெயரைப் பரிந்துரைக்கவும் மொட்டு கட்சியினர் தயாராக உள்ளனர்.
அதற்கான முன் ஆயத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்துகளை பெற்று, அதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.