கோட்டாபய மீது அமெரிக்கா வழக்கு!
அமெரிக்க அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு திரு.கோத்தபாய ராஜபக்க்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதற்கு முன்னர் இடம்பெற்ற பல சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதன்படி, ஒரு கட்டத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு அமெரிக்க நீதிமன்றத்தின் அழைப்பாணை பெற்று நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி அமெரிக்காவிலிருந்து கிரீன் கார்ட் விசா வசதிக்காக விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த நிலையில் அதனை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.