தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை உறுதி – நீதி அமைச்சர் விஜயதாஸ கருத்து.

“முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.”
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடனும் என்னுடனும் பேச்சு நடத்தியுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம்.
அதற்கமைய முதல் கட்டமாகக் குறிப்பிட்ட சில தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும். அதன்பின்னர் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கி விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவற்றுள் அரசியல் கைதிகள் விவகாரமும் ஒன்று. இதனைக் கருத்தில்கொண்டு அரசு செயற்படும்” – என்றார்.