செப்டம்பர் 01 முதல், தண்ணீர் கட்டணம் 70% உயர்வு!
நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த முடிவு செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடுகளின் நீர் கட்டணம் 70% அதிகரிக்கப் போவதாகவும், ஆனால் குறைந்த வருமானம் பெறும் வீடுகளின் குடிநீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
வணிக வளாகங்களுக்கான கட்டண உயர்வு சதவீதம் குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
முன்னதாக, மின் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 70% கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும், சில கட்டணங்களின் மதிப்பு 100%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.