மகன்களுக்காக மீண்டும் இணைந்த தனுஷ், ஐஸ்வர்யா..

ஐஸ்வர்யா சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இவர்களுடைய இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
விவாகரத்துக்கு பின் ஒன்றாக இருவரும் எந்த ஒரு இடத்திலும் சந்தித்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர்களுடைய பழைய வீட்டில் ரகசியமாக இருவரும் சந்தித்துக்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், விவாகரத்து அறிவித்த 7 மாதங்களுக்கு பின் தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்றாக சந்தித்து கொண்டுள்ளார்கள். இதற்க்கு காரணம் தனுஷின் மூத்த மகன் யாத்ரா தான்.
ஆம், இன்று தனுஷ் – ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தனது பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவியேற்றுள்ளார். அதை காண தான் தனுஷ் – ஐஸ்வர்யா சென்றுள்ளார்கள். அங்கிருந்து அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.