உலகின் மிக கவர்ச்சியான விளையாட்டு வீராங்கனை.
ஜேர்மனிய மெய்வல்லுநரான அலிகா ஸ்மித் உலகின் மிக கவர்ச்சியான விளையாட்டு வீராங்கனையாக வர்ணிக்கப்படுகிறார்.
ஜேர்மனியில் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த ஐரோப்பிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றிய அலிகா ஸ்மித், இப்போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டதை அறிந்தவுடன் தான் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
23 வயதான அலிகா ஸ்மித் 400 மீற்றர் ஓட்டத்தில் பிரபலமானவர்.
5 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகளின் 4 X 400 மீற்றர் ஓட்டத்தில் அலிகா அடங்கிய ஜேர்மனிய அணி வெள்ளிப்பதக்கம் வென்றதின் பின் அலிகா ஸ்மித் பிரபலமாகத் தொடங்கினார்.
அதையடுத்து சமூக வலைத்தங்களில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் ஒரு லட்சத்தினால் அதிகரித்ததாக அலிகா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய சஞ்சிகையொன்று உலகின் மிக கவர்ச்சிகரமான வீராங்கனை என அலிகா ஸ்மித்தை முதன்முதலில் வர்ணித்தது.
இன்ஸ்டாகிராமில் 32 லட்சம் பேரும், டிக்டொக்கில் 10 லட்சம் பேரும் அலிகாவை பின் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் நடைபெற்ற ஐரோப்பிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டதை அறிந்தவுடன் தான் ஆனந்த கண்ணீர் வடித்ததாக அலிகா தெரிவித்தார்.
ஊடகங்களுக்கும் அலிகா தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தன. எனினும், அவரால் பதக்கம் எதனையும் வெல்ல முடியவில்லை.
மகளிருக்கான 400 மீற்றர் ஓட்டத்தின் அரை இறுதியில் அவர் கடைசி இடத்தையே பெற்றார்.
எனினும் அதன்பின் நடைபெற்ற 4 X 400 மீற்றர் அஞ்சலோட்டத்தின் இறுதிப்போட்டிக்கு ஜேர்மனிய அணி தெரிவாகுவதற்கு அலிகா உதவினார். இறுதிப்போட்டியில் ஜேர்மனிய அணி 4 ஆவது இடத்தைப் பெற்றது.