வசந்த முதலிகே உள்ளிட்டோர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு……?
கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் (முன்னிலை சோசலிசக் கட்சி ஆதரவு) அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய இருவர் தொடர்பான விசாரணைகளில் ஏதேனும் பயங்கரவாதச் செயலுக்கான செயல்பாடுகள் தெரிந்தால் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் , அவர்களை ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இவர்கள் மூவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன்படி, அரச விரோதச் சதி இடம்பெற்றுள்ளதா என அறிந்து, பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும், உண்மைகள் வெளிவரும் பட்சத்தில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் அவர்களை , ஒப்படைக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.