பிறந்த குழந்தை முதல் நாட்டில் உள்ள அனைவரும் இப்போது மிலியன் கடனாளிகள்!
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 23,310.1 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 23.31 டிரில்லியன்.
உள்ளூர் கடன் ரூ. 12,442.3 பில்லியன் மற்றும் வெளிநாட்டு கடன் ரூ. 10.867.8 பில்லியனாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள சிறப்பு என்னவென்றால், 2021ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 17,589.4 பில்லியனாக பதிவான மத்திய அரசின் மொத்த கடன் தொகை 04 மாதங்களில் இது 5,720.7 பில்லியன் ரூபாய் அல்லது 32.52% அதிகரித்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டில் நாட்டின் சராசரி ஆண்டு மக்கள்தொகை 22.156 மில்லியன் ஆகும்.
கணக்கீட்டின்படி இந்த நாட்டில் தனிநபர் கடன் ரூ. 1,052,089 ஆகும். 2021 ஆம் ஆண்டின் இறுதியில், இது ரூ. 793,888 ஆகியது.
அதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பத்து இலட்சம் ரூபா கடன் உள்ளது. நாளை பிறக்கும் குழந்தையும் இதற்கு சொந்தமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.