நுரையீரல் பாதிப்பை சரி செய்யும் முயற்சியில் வைத்தியர்கள்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தன் மகனை நேற்று அடையாளம் கண்டு, சைகை காட்டி நலம் விசாரித்தது, அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கும் நிலையில், நுரையீரல் பாதிப்பை சரி செய்யும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.