கோமா நிலையில் பிரணாப் முகர்ஜி..
இந்தியா முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, 84, மூளையில் உருவான ரத்தக்கட்டியை அகற்ற, 10ம் தேதி, டில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தக்கட்டி அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதுடன், நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது.
இதனால், ‘கோமா’ நிலைக்கு சென்ற அவர், ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில், எவ்வித முன்னேற்றமும் இல்லை என, மருத்துவமனை நிர்வாகம், நேற்று கூறியுள்ளது.