பாதுகாப்பு உள்ளிட்ட சலுகைகள் கோட்டாவுக்கு வழங்க வேண்டும் ரணிலிடம் மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை.

“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்சவுக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்களை ஏற்படுத்திக் கொடுக்கவும்.”

இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதம் கிடைக்காமையால், கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடு திரும்ப முடியாதுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

எந்தவொரு பிரஜைக்கும் தமது நாட்டுக்கு வருவதற்கான உரிமை இருக்க வேண்டும்.

எனவே, முன்னாள் ஜனாதிபதிக்குச் சட்டபூர்வமாகக் கிடைக்க வேண்டிய வரப்பிரதாசம் உள்ளிட்ட சலுகைகள் கோட்டாபய ராஜபக்சவுக்கும் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவரின் குடும்பத்தாரும் நாட்டுக்கு வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்” – என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    நாட்டைக் கொள்ளையடித்து ஓடியவன் இவனுக்கு என்ன பாதுகாப்பு அளிக்க வேண்டும் இலங்கையரை முட்டாள்கள் என்று தான் சொல்ல வேண்டும்
    இவனை நடுரோட்டில் வைத்துக் கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்

Leave A Reply

Your email address will not be published.