‘அரகலய போராட்டம்’ ஜே.வி.பி.யை மிக மோசமாக பாதித்தது – சிந்தன தர்மதாச
அரகலய போராட்டம் ஜே.வி.பி.யை மிக மோசமாகப் பாதித்தது. போராட்டத்திற்கு முன்னர் ஜே.வி.பியின் அநுரகுமாரதான் களத்தில் வீரனாக தெரிந்தார். அனைவரின் அரசியல் விருப்பமும் அவரை நோக்கியதாகவே இருந்தது.
அனுராவைப் போல இருந்தது.
ஃபேஸ்புக்கில் அப்படியான வரவேற்பு அனுரகுமார தரப்புக்கு இருந்தாலும் , தள நிலவரம் எப்படி என அறிய அனுரகுமார தரப்பு வழக்கம் போல் கிராமத்திற்கு சென்றனர். கிராமத்தில் இருந்து தொடங்குங்கள் என ஆரம்பித்தனர்.
கிராமத்தில் இருந்து ஜே.வி.பி., மக்களை இணைக்க முற்படத் தொடங்கி இருந்த போது, திடீரென கொழும்பு தலைநகரில் அரகலய போராட்டம் தலைதூக்கியது. அது இவ்வளவு தூரம் வெற்றி பெறும் என யாரும் நினைத்தே இருக்கவில்லை.
கேஸ் , மின்சாரம் இல்லாத பிரச்னைக்காக சின்ன குட்டி பையன்கள் வீதியில் இறங்கினால் அதை யார்தான் அரசியலாகக் கருதுவார்கள்.
ஜே.வி.பி.க்கு எப்படியும் அந்த நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சனைகள் புரியவில்லை. எனவே இதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஜே.வி.பியினர் கேலியும் , நையாண்டியும் செய்யத் தொடங்கினர்.
அதன் பிறகு போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அரகலய போராட்டத்திற்கு வெளியே அரசியல் இல்லை. கிராமத்துக்கு போன அனுர தரப்பு கிராம்தை விட்டு கொழும்புக்கு வர வேண்டியிருந்தது. அப்போதுதான் அரகல போராட்டத்தில் இருந்த இளைஞர் குழுக்கள் , சில கூடாரங்களை போட்டுக் கொண்டு , அந்த அணி , இந்த அணி என இளையோர் கோல்பேஸ் அதிகாரத்தை கையில் எடுக்க ஆரம்பித்தனர். இவையெல்லாம் தவறு என்று நான் சொல்லவில்லை. அதைத்தான் அரசியல் என்பது. ஒன்றாக தங்கள் சக்தியை அதிகரிக்கும் திசையில் முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இதுதான்.
ஆனால் மைதானத்தின் ஜே.வி.பி.க்கு போதுமானதாக ஆட்கள் இருக்கவில்லை. முன்னிலை சோசலிசக் கட்சியினர் (Frontline Socialist Party) போல , வீதி போராட்டம் இப்போது ஜே.வி.பி.க்கு கடினமான ஒன்றாகவே உள்ளது. தவிர, ஜே.வி.பி ஓரளவு முதிர்ச்சியடைந்த கட்சியாகிவிட்டது. அவர்களின் எதிர்ப்பிற்குள்ளும் கூட சில சமயம் ஆதரவு உண்டு. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஜே.வி.பியின் தற்போதைய முயற்சியாகும்.
குமார் குணரத்தினம் என்பவர் இன்னும் காடுகளில் வாழும் ஒரு உயிர். அவரது மகிழ்ச்சி என்பது , சாலைகளில் உள்ள தடைகளை இடித்துத் தள்ளுவதிலும் , அடி வாங்குவதிலும் உள்ள ஒரு சுகம். அவரிடம் இணக்க அரசியல் பற்றிய எந்த கருத்தும் இல்லை. அந்தரே எனும் மாணவர் அமைப்பின் தலையில்லாத உடல் , குணரத்தினம் கட்சியினுடையது.
எனவே ஜே.வி.பி.க்கு வீதி போராட்டங்கள் என்பது கடினமானது. தற்போது, ஜே.வி.பி.யில் பல ஆசிரியர்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் என சிலர் உள்ளனர். அவர்கள் போராளிகள் அல்ல. மாற்றத்தை விரும்புபவர்கள்.
எனவே அரகலய போராட்டம் தோல்வியடையும் வரை ஜே.வி.பி காத்திருக்கிறது. இது மிகவும் சரியான அரசியல் முடிவு. பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பதற்குப் பதிலாக சட்டமே சரி என்ற நிலையில் இருந்து அரசியல் கட்சியாகப் பார்ப்பது அப்படித்தான் என்று நினைக்கிறேன். தொடக்கத்தில் அரகல போராட்டத்துக்குள் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றும் திட்டம் இருந்தபோதிலும், கடைசியில் அரகலய பூமியில் தாங்கள் ஒதுக்கப்படாமல் போராட்டத்துக்குள் இருந்தாலே போதும் என்ற மன நிலைக்கு ஜே.வி.பி.வந்தது.
ஜே.வி.பியினர் அரசாங்கத்தை பொறுப்பேற்கவும் தயாராக இல்லை. இது உண்மையில் ஜே.வி.பியினரது புத்திசாலித்தனம். ஜே.வி.பிக்கு இன்னும் அந்த நடைமுறை பரிச்சயம் போதாது. பாராளுமன்றத்தில் தமது ஆசனங்களை அதிகரிப்பதன் மூலம் தீர்க்கமான அதிகாரத்தை உருவாக்குவதே அவர்களின் இலக்காகும். உண்மையில் நானும் இந்த விடயத்தில் என்னால் முடிந்தவரை ஜேவிபியை ஆதரிக்கிறேன். பாராளுமன்றத்தில் ஜே.வி.பிக்கு உறுதியான அதிகாரம் இருக்க வேண்டும்.
இதன் காரணமாக, ஜே.வி.பி முடிந்தவரை தூய கொள்கைகளுக்காக நிற்கிறது. அது ஒரு வழிபாட்டுக் கட்சியின் வழி. அவர்கள் ஒரு முக்கிய இடத்தில் நிற்க முடியும்.
ஒரு கட்சி பெரிதானால் அது கடல் போல் ஆகிவிடும். ஒவ்வொரு குப்பைக் குவியலிலும் இருக்கும் உப்புச் சுவையுடன் கூடிய ஒரு அடையாளம். ஆனால் ஜே.வி.பியிடம் இந்தத் தூய்மைவாத மனோபாவத்தை அரசியல் உத்தியாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
ரணிலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தை சம்பிக்கவே கைப்பற்றுவார்.
ஜே.வி.பிக்கு இன்னும் சோசலிச முன்னணி கட்சி மிகப்பெரிய போட்டியாக உள்ளது. மேலும் ஒரு வழிபாட்டு கட்சியாக இருந்த சிஹல உறுமய தற்போது 43 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் தங்கள் வழிபாட்டு அடையாளத்தை ஒட்டுமொத்தமாக கரைத்து வருகின்றனர்.
இலங்கையின் தனித்துவமான அரசியல் போக்குகளில் ஒன்று சம்பிக்க பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கு. அவர்கள் எப்போதும் ஒரு பெரிய கட்சிக்குள் வளர்வதன் மூலம் தங்கள் அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்துகிறார்கள். இது ஒரு மேம்பட்ட முறை. அனேகமாக ரணிலுக்குப் பிறகு ஐ.தே.க.வின் அதிகாரத்தை சம்பிக்க கைப்பற்றுவார்.
ஜேவிபியின் பாதை வேறு. மேலும், அவர்கள் தங்கள் பங்கைக் காப்பாற்ற முன்னிலை சோசலிசக் கட்சியுடன் (Frontline Socialist Party) தொடர்ந்து சர்ச்சைப்படவும் வேண்டி வரும்.
ஆகஸ்ட் 20 நுகேகொடை ஜே.வி.பியின் கூட்டம்
நுகேகொடை பேரணியை நடத்தியதன் நோக்கமும் அதுதான் என்று நினைக்கிறேன்.
உங்கள் சக்தியை மீண்டும் கவனியுங்கள். போராட்டத்தில் உங்கள் பங்கிற்கு ஸ்திரத்தன்மையை உருவாக்குங்கள்.
அடுத்த தேர்தலுக்கு இது அவசியம்.
எனவே அநுரவின் போராட்டம் பற்றி சொல்லப்படும் கதைகள் , அவர் போராட்டத்தில் தோற்றுப்போன தலைவர் என்ற திசையை நோக்கியவையாகும்.
இதுதான் தலைமைத்துவத்துடன் நடக்கும் உண்மையான அரகலய போராட்டம் என்ற கதைக்கு என நினைக்கலாம்.
அந்த கூட்டம் அரசுக்கு எதிராக நடத்தப்படவில்லை. இது அவர்களின் சொந்த எண்ணங்கள் கொண்ட அணிக்களுக்கு இடையிலான பலத்தை காட்டும் போட்டி பேரணியாகும்.
– சிந்தன தர்மதாச
அரசியல் மற்றும் சமூக ஆய்வாளர்
தமிழில் : ஜீவன்