வசந்த முதலிகே,ஹசந்த குணதிலக்க,கல்வெவ சிறிதம்ம தேரர் தங்கலைக்கு…..
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஹசந்த குணதிலக்க மற்றும் வணக்கத்திற்குரிய கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தங்காலை மத்திய தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான சதி இடம்பெற்றுள்ளதா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகே, ஹசாந்த குணதிலக்க மற்றும் வணக்கத்திற்குரிய கல்வல சிறிதம்ம தேரர் ஆகியோரை 90 நாட்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) ஒப்புதல் அளித்துள்ளார்.