அறையில் பூட்டி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட சிறுமி.

 

வவுனியா, பெரியதம்பனை பகுதியில் வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களால் இன்று மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொ டர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, செட்டிகுளம், பெரியதம்பன, மருதங்குளி ப குதியில் உ ள்ள வீ டு ஒ ன்றில் வைத்து 7 வயது சிறுமி ஒருவரை பல நாட்களாக தொடர்ச்சியாக தாயார் மற்றும் தாயாரின் மறுதார கணவர் ஆகியோர் அடித்து, சூடுவைத்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், இ ன்றைய தினமும் குறித்த சிறுமி தாயாரால் அடித் து துன்புறுத்தப்பட்டு வீட்டு அறை ஒன்றில் தனியாக வைத்து பூட்டப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தெரியவர அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது வீட்டில் எவரும் இல்லாத நிலையில் குறித்த சிறுமியை வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைத்திருந்த நிலையில் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடு த்துள்ள செட்டிகுளம் பிரதேச செயலக ப ண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் சிறுமியின் வாக்குமூலம் மற்றும் சிறுமியின் உடலில் இருந்த துன்புறுத்தல் காயங்கள் தொடர்பில்,

விசாரணைகளை முன்னெடுத்து ள்ளதுடன், குறித்த சிறுமியை பறையனாலங்குளம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுள்ளனர். சிறுமி தொடர்பில் வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.