யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு – புகையிரத நிலைய அதிபர்
யாழ் – கொழும்பு புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிர நிலைய அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஏற்பட்ட கொரோணா தொற்று அச்சம் காரணமாக யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுருந்தது. தற்்போது அனைத்து சேவைகளும் ஆரம்பமாகியுள்ளது
கொரோணா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த நகர் சேர் கடுகதி புகையிரதசேவை எதிர்வரும் 29 ,30 ,31 ,மற்றும் 1ம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவையினை ஆரம்பிக்கவுள்ளது. எனவே பயணிகள் தங்களுக்குரிய முன் ஆசன பதிவுகளை யாழ் புகையிரதநிலையத்தில் மேற்கொள்ள முடியும் என்றார்.