ரணில் மறைத்த , ரகசியத்தை வெளியிட்ட சுமந்திரன் ! (வீடியோ)
இன்று கொழும்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழிக்கும் கையெழுத்து வேட்டை மீண்டும் ஆரம்பமானது. அதை தலைமை தாங்கி பேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , சட்டத்தரணியுமான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கீழ் கண்டவாறு தனது கருத்துகளை முன்வைத்து பேசினார்
“2017ம் ஆண்டு GSP+ நல்லாட்சி காலத்தில் பிரசல்ஸ் நகருக்கு சென்று பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதாக ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதியை நம்பித்தான் GSP+ மீண்டும் இலங்கைக்கு கிடைத்தது. ஆனால் அது கடந்த 5 வருடங்களாக அகற்றப்படாமல் உள்ளது. அத்தோடு மற்றோர் வாக்குறுதியாக இந்த பயங்கரவாத சட்டம் இருந்தாலும் கூட இந்த சட்டத்தை பாவிக்கப் போவதில்லை என அவர் உறுதியளித்தார்.
அவை அனைத்தையும் மீறி , அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு பாவிக்கப்படுகிறது. அதே ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு அமைச்சராகவும் , ஜனாதிபதியாகவும் இருந்து கொண்டு , இந்த வார ஆரம்பத்தில் பயங்கரவாத சட்டத்தில் 3 பேரை தடுத்து வைக்கவும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத சட்டத்துக்கு எதிராக அனைவரது கையெழுத்தை பெறும் நோக்கில் , கையெழுத்து வேட்டை பல நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் எரிபொருள் பிரச்சனைகள் காரணமாக அதை தற்காலீகமாக கைவிட்டு இருந்தோம். இப்போது அவசரமாக இதை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டடில் வாழும் மக்களுக்கு எதிரான இந்த பயங்கவாதமான சட்டத்தை இல்லாதொழிக்க கையெழுத்து வேட்டையை மீண்டும் ஆரம்பிக்கிறோம். அதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்
IMF குழுவினர் வந்திருக்கும் வேளையில் பயங்கரவாத சட்டத்தை இல்லாதொழித்து , வேறோர் சட்டத்தை கொண்டு வரப் போவதாக சொல்கிறார். அது நடுநிலைப்படுத்தப்படுகிறது.
ஆனால் செயல்பாட்டில் பல வருடங்களாக இல்லாதிருந்த சட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளார். இதனால் சர்வதேச சமூகத்துக்கு கொடுக்கும் செய்தி என்ன?” என பலரும் அறிந்திராத விடயத்தை கூட்டமைப்பின் பேச்சாளரும் , சட்டத்தரணியுமான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கப்படுத்தினார்.
தமிழ் – ஆங்கில – சிங்கள பேச்சுகள் அடங்கிய வீடியோ