மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கூடைப்பந்து சுற்றுப்போட்டி

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கூடைப்பந்து சுற்றுப்போட்டித்தொடர் இன்று திருகோணமலை மெக்கேசர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
தம்பலகாமம்,கந்தளாய், மொரவெவ,வெருகல், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக அணிகள் மற்றும் மாவட்ட செயலக அணியும் கலந்து கொண்டன.
இறுதிப்போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக அணியும் மாவட்ட செயலக அணியும் பலப்பரீட்சை நடாத்தியதுடன் 12:7 என்ற புள்ளியினடிப்படையில் மாவட்ட செயலக அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
இறுதிப்போட்டியை கண்டுகழிக்க மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன ,பிரதேச செயலாளர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.